ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை...யார் தெரியுமா..?
90களுக்குப் பிறகு, தென்னிந்தியத் திரைப்படத் துறை வளர்ச்சியடைய தொடங்கியது. பல படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த நேரத்தில், மக்கள் திரையரங்குகளுக்கு அதிகம் வந்தனர். இதன் காரணமாக ஒரு படத்திற்கு ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகர்கள் ரூ. 1 கோடிக்கு மேல் வாங்கினர். அந்த நேரத்தில், ஒரு கதாநாயகி நட்சத்திர ஹீரோக்களுக்குப் போட்டியாக, ஒரு படத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்.
'கனகவதி என்னைப்போல் இல்லை': ருக்மிணி வசந்த்
காந்தாரா: சாப்டர் 1 படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும்நிலையில், நடிகை ருக்மிணி வசந்த், படத்தில் நடித்தது குறித்து பேசினார். படத்தில் கனகவதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தான் இதற்கு முன்பு செய்யாத ஒன்றை முயற்சித்ததாகப் பகிர்ந்துள்ளார்.
25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர 82 ஆயிரம் பேர் விண்ணப்பம்
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் சுமார் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை சேருகிறார்கள்.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 717 பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர 81 ஆயிரத்து 927 மாணவர்களும், முதலாம் வகுப்பில் சேர 89 மாணவர்களும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் திரில்லர் படம்...எதில் பார்க்கலாம்?
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரில்லர் படமான பிளாக்மெயிலில் இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.
'கர்னூல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது' - ராஷ்மிகா மந்தனா
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பஸ்சில் இருந்த பயணிகளில் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்னூர் சம்பவம் மிகவும் வேதனையளித்ததாக தெரிவித்திருக்கிறார்.
தந்தை ஜெராக்ஸ் கடை ஓனர்...மகன் தொடர் ரூ.100 கோடி படங்களை கொடுத்து வரும் நடிகர்...யார் தெரியுமா?
தங்கள் மகன் பெரிய ஹீரோவாக இருக்கும் போதிலும், இன்னும் எளிமையான வாழ்க்கையை சில பெற்றொர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உதாரணமாக, பான் இந்திய ஸ்டார் யாஷ்...இவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற போதிலும், அவரது தந்தை இன்னும் ஒரு பேருந்து ஓட்டுநராக வேலை செய்கிறார். அதேபோல், மற்றொரு ஹீரோவின் தந்தை இன்னும் ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
100 மில்லியன் பார்வைகளை கடந்த ஹாரர் திரில்லர்....இப்போது பல மொழிகளில்...எதில் பார்க்கலாம்?
திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற ஹாரர் படமான கிஷ்கிந்தாபுரி, இப்போது ஜீ5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
46 விருதுகளை வென்ற படம்...இப்போது ஓடிடியில்....எதில் பார்க்கலாம்?
விக்ராந்த் ருத்ரா இயக்கி, ஸ்ரீனி குப்பாலா தயாரித்த படம் அர்ஜுன் சக்ரவர்த்தி. கடந்த ஆகஸ்ட் மாதம், திரையரங்கில் வெளியான இப்படம் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய தெலுங்கானாவின் நல்கொண்டாவைச் சேர்ந்த கபடி வீரரான நாகுலய்யாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது.
பாலிவுட் செல்கிறாரா சிவகார்த்திகேயன்?...பிரபல இயக்குனருடன் சந்திப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மும்பையில் உள்ள திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.