மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் குறியீடு 624.03 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 624.03 புள்ளிகள் சரிவடைந்து 81,011.88 புள்ளிகளாக உள்ளது.
சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும் காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
“தென்மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள்போல்..” - பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேச்சு
சென்னையில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட விரிவாக்க விழாவில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேசியதாவது:-
தென்மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள்போல் எங்கு பார்த்தாலும் கிடைக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தென் மாநில உணவுகள் கிடைக்கின்றன. குறிப்பாக மசாலா தோசை, உப்புமா போன்ற உணவுகள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் கிடைக்கின்றன.
பஞ்சாபில் நாளை (ஆக.27) நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிப்போம். காலை உணவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான உணவு வழங்குவது என்பது அசாத்தியாமானது. முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுகள்.
பஞ்சாப்பில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் வர வேண்டும். பஞ்சாப் என்பது வீரமரணம் அடைந்தவர்களின் மண். அதைப் பார்க்க அவசியம் வர வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினிக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த 3 நடிகைகள்...யார் தெரியுமா?
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சினிமா உலகில் வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் ''கூலி'' படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் அமீர் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே.
ஆனால் உங்களுக்குத் தெரியுமா..?, ரஜினி வெவ்வேறு படங்களில் மூன்று கதாநாயகிகளின் கணவராகவும் மகனாகவும் நடித்தார். அவர்கள் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
ரெயில்வே அலுவலகப்பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.. தெற்கு ரெயில்வே உத்தரவால் பரபரப்பு
அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
இந்த வார விசேஷங்கள்: 26-8-2025 முதல் 1-9-2025 வரை
26-ந் தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதியம் மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* உப்பூர் விநாயகர் ரத உற்சவம்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.
கேரளாவில் கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில் கோவில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கட்சி மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர், மலபார், கொச்சி தேவசம்போர்டுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வியட்நாமை தாக்கிய கஜிகி புயல்; 3 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்
தாய்லாந்தின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் லாவோஸ் நாடுகளில் புயலின் தாக்கம் இன்று காலை கடுமையாக உணரப்பட்டது.
தலையில்லாத உடல் யாருடையது?...ஒரு வருடம் கழித்து ஓடிடிக்கு வந்த சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்....
சஸ்பென்ஸ், குற்றம், திரில்லர் போன்ற திரைப்படங்களுக்கு ஓடிடியில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது பெரிய வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நாம் இப்போது பார்க்கப்போகும் படமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய அட்வைஸ் என்ன..?
நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செய்து, அந்நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பசியும் பிணியும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு என வள்ளுவர் கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்குவது மட்டுமின்றி அவர்களின் பசியையும் போக்க வேண்டும். 20 லட்சம் மாணவர்கள் சூடான, சுவையான, சத்தான உணவை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்வார்கள்.
காலை உணவுத் திட்டத்தை செலவு என சொல்ல மாட்டேன். சூப்பரான சமூக முதலீடுதான் இந்த திட்டம். மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து உயர்ந்தால் போதும். அதுவே இந்த திட்டத்திற்கான வெற்றிதான். காலை உணவுத் திட்டத்தை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன்
மாணவர்களே, நல்லா சாப்பிடுங்க, நல்லா படிங்க, நல்லா விளையாடுங்க.. உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கும். எங்களுக்கு எப்போதும் நீங்கள்தான்.. உங்களுக்காகதான் நாங்கள் இருக்கிறோம், இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.