இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Aug 2025 7:55 PM IST
தமிழகத்திற்கு 36.76 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தல்
தமிழகத்திற்கு செப்டம்பர் மாதத்திற்கான 36.76 டி.எம்.சி நீரினை வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் நீரினை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
- 26 Aug 2025 6:44 PM IST
புலி நடமாட்டம் - பிரம்மாண்ட கூண்டு வைப்பு
கூடலூரில் 13 பசு மாடுகளை வேட்டையாடி போக்கு காட்டும் புலியை பிடிக்க 30 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- 26 Aug 2025 5:45 PM IST
செப்.1 முதல் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்
கேரளாவின் கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் QLN-TBM எக்ஸ்பிரஸ்(16102) ரெயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்.1 ஆம் தேதி முதல் கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்ட ரெயில் மாலை 4 மணிக்கு புறப்படும் என்றும், தாம்பரம் ரெயில் நிலையத்தை நள்ளிரவு 2.30 மணிக்கு அடைந்த ரெயில், காலை 7.30 வந்து அடையும் என தெற்கு ரெயில்வே அறித்துள்ளது.
- 26 Aug 2025 5:41 PM IST
முதல் விமானத்தை கண்டுபிடித்தது நாம் தான் -சிவராஜ் சிங் சவுகான்
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது. இன்று நம்மிடம் உள்ள ட்ரோன்கள், ஏவுகணைகளை பண்டைய காலத்திலயே வைத்திருந்தோம். இதை நாம் மகாபாரதத்தில் படித்திருக்கிறோம் என்று மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
- 26 Aug 2025 5:18 PM IST
விநாயகர் சதுர்த்தி - பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தூத்துக்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000, பிச்சிப்பூ கிலோ ரூ.1,500, கனகாம்பரம் கிலோ ரூ.2,000க்கு விற்பனை ஆகிறது.
- 26 Aug 2025 5:16 PM IST
ரணிலுக்கு பிணை வழங்கியது இலங்கை நீதிமன்றம்
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியது. கடந்த 22ம் தேதி அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய புகாரில் ரணில் கைது செய்யப்பட்டார்.
- 26 Aug 2025 4:59 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம். கடந்த 9ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 6 மீனவர்களுக்கு இந்திய மதிப்பில் தலா ரூ.87,000. ஒருவருக்கு ரூ.14,500 அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம்.
- 26 Aug 2025 4:56 PM IST
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவருக்கும் செப். 9ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.













