இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

Update:2025-08-26 09:06 IST
Live Updates - Page 5
2025-08-26 04:29 GMT

ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,355க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74,840 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 130க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


2025-08-26 04:21 GMT

நானியுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா?...இப்போது ஹாலிவுட் நடிகை

ஒரு காலத்தில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களாகத் தோன்றிய குழந்தைகள் இப்போது ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களாக வலம் வருகிறார்கள். இவரும் அவர்களில் ஒருவர்தான். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு, இவர் ஹாலிவுட்டுக்கு சென்றார்.

2025-08-26 04:07 GMT

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செய்து, அந்நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவல்ல, சூப்பரான சமூக முதலீடு. இக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவார்கள். இதுதான் இத்திட்டத்தின் உண்மையான வளர்ச்சி

இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள்.. மகிழ்ச்சிக்குரிய நாள். குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. இன்று நாள் முழுவதும் எனக்கு ஆக்டிவான நாளாக, மனநிறைவான, மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கப் போகிறது.  20 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது?

இவ்வாறு அவர் கூறினார்.

2025-08-26 03:59 GMT

காலை உணவுத் திட்டம்.. மாணவர்களின் அறிவுப்பசியை போக்கும் திட்டம் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், வயிற்றுப் பசியை போக்கும் திட்டம் மட்டுமல்ல மாணவர்களின் அறிவுப்பசியை போக்கும் திட்டம்.

காலை உணவுத் திட்டத்தை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான உணவை தாய்மை உள்ளத்தோடு சமைத்து தரும் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகளுக்கு நன்றி. காலை உணவுத் திட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல.. சில வெளிநாடுகளிலும் பின்பற்றுகின்றனர்” என்று தெரிவித்தார்.

2025-08-26 03:55 GMT

கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் கோயம்பேடு மார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

2025-08-26 03:50 GMT

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

2025-08-26 03:49 GMT

பிரான்ஸ்: காட்டுத்தீயை அணைக்க ஏரியில் நீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர்; அடுத்து நடந்த விபரீதம்


குளத்தில் தண்ணீர் எடுத்தபோது, அந்த ஹெலிகாப்டர் திடீரென நீரின் மேற்பரப்பை தொட்டுள்ளது. இதில், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



2025-08-26 03:46 GMT

தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: என்ன காரணம்.? - விளக்கம் அளித்த தெற்கு ரெயில்வே


விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


2025-08-26 03:46 GMT

தமன்னா - டயானா நடித்த ''டூ யூ வான்னா பார்ட்னர்'' வெப் தொடர்... - எங்கு, எப்போது, பார்க்கலாம்?

நடிகைகள் தமன்னா பாட்டியா மற்றும் டயானா பென்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிட்த்திருக்கும் ​​''டூ யூ வான்னா பார்ட்னர்'' வெப் தொடரின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

2025-08-26 03:45 GMT

விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்: செல்வப்பெருந்தகை


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “குறைந்தபட்சம் மேடையில் நாகரீகமாக பேச வேண்டும். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து கணிசமான வாக்குகள் பெற்றார். 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற அந்த கட்சி, தற்போது என்ன நிலையில் இருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி கூட்டிய மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

கடைசியில் காங்கிரஸ் கூட கட்சியில் இணைத்து கொண்டார்கள். தற்போது அந்த கட்சியே இல்லை. அதுபோன்று பல கட்சிகள் வரும், காணாமல் போகும். காங்கிரஸ் நிலைத்து நிற்பதற்கு காரணம் சித்தாந்தம் வலிமையாக இருப்பதே ஆகும். யானை பலம் உள்ள ஒரு கட்சி காங்கிரஸ். நாங்கள் யாரையும் கொச்சைப்படுத்தி பேச மாட்டோம். எங்கள் கொள்கை எதிரியான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா இருந்தாலும் நாகரீகமாக தான் அவர்களை பற்றி பேசுகிறோம்” என்று அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்