தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் புதுச்சேரியில் கூறியுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து 7 பேரின் உடல்களை போலீசார் மீட்டுள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கனமழை
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா செல்கிறார் வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.மே 29 வரை அமெரிக்காவில் இருக்கும் விக்ரம் மிஸ்ரி அந்நாட்டு உயர் அதிகாரிகள் பலரை சந்திக்கிறார். கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதன் தொடர்ச்சியாக மிஸ்ரி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி ஆன்மீக, அமைதி பூமி: ரங்கசாமி
புதுச்சேரி ஆன்மீக மற்றும் அமைதியான பூமி. யோகா உலகளவில் இருப்பதில் பெரிய பங்கு பிரதமர் மோடிக்கு உண்டு. யோகா கலையை வளர்க்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.