கோவை தனியார் சிறுவர்கள் காப்பகம் மூடல்
கோவை: அன்னூர் அருகே தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் 8 வயது சிறுவனை காப்பாளர் செல்வராஜ் தாக்கிய விவகாரத்தில், காப்பகம் மூடப்பட்டது. காப்பாளர் கைதும் செய்யப்பட்டார். முன்னதாக அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
2021ஐ விட 2026ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும் - டிடிவி தினகரன் உறுதி
"2021 தேர்தலை விட 2026ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தன் கையில் கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி.. செங்கோட்டையன் பதில்
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து என்னுடைய கருத்தை மட்டுமே நான் கூற முடியும். அவருடைய கருத்தை அவரிடமே கேளுங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பிக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு என காங்கிரஸில் குரல்கள் எழும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
''சின்ன வயதில் இருந்தே அவரை பிடிக்கும், வாய்ப்பு கிடைத்தால்...'' - நடிகை அமிஷா படேல்
பிரபல ஹாலிவுட் நடிகரை திருமணம் பண்ண விரும்புவதாக அமிஷா படேல் கூறி இருக்கிறார்.
பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
''இவை உண்மையானவை, ஏஐ புகைப்படங்கள் இல்லை'' - சாய் பல்லவி
நீச்சல் உடை சர்ச்சைக்கு சாய் பல்லவி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
இந்தியாவுடன் அமைதியை விரும்புவதாக பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு, அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா. கூட்டத்தில் இந்திய பிரதிநிதி பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து கூட்டத்தில் பேசிய அவர், “அமைதியை பாகிஸ்தான் விரும்புகிறது என்றால் தீவிரவாதத்தை முற்றிலும் கைவிட வேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அனைத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும். இந்தியாவிடம் முக்கிய தீவிரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்று இந்திய பிரதிநிதி கூறினார்.
3-ம் நபர் தலையீடுக்கு இடமில்லை - ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டம்
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் நபர் தலையீடுக்கு இடமில்லை என்றும், இருநாட்டு பிரச்சனைகளை இருநாடுகளுமே பேசி தீர்த்து கொள்ளும் என்றும், அணு ஆயுத மிரட்டலுக்கு பணிய மாட்டோம் என்றும் ஐநா அவையில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.