இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

Update:2025-03-29 09:48 IST
Live Updates - Page 2
2025-03-29 06:07 GMT

அக்னிவீர் திட்டத்தின் படி இந்திய ராணுவத்தில் சேர ஏப்ரல் 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்; www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

2025-03-29 05:33 GMT

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்; அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

2025-03-29 05:26 GMT

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

2025-03-29 05:17 GMT

டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் திருவிழா தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் ஜூன் 5-ந்தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2025-03-29 04:46 GMT

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனீஸ்வர பகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026-ல் சனிப்பெயர்ச்சி ஏற்படும் என திருநள்ளாறு கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

2025-03-29 04:42 GMT

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வீடு புகுந்து 17 வயது சிறுமி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் கடந்த 23-ந்தேதி சம்பவம் நடந்த நிலையில், தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

இந்த வழக்கில், விசாரணை மேற்கொண்ட காவல் துறை, முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பரை கைது செய்து உள்ளது.

2025-03-29 04:35 GMT

தென் மாநிலங்கள் முழுவதும் 3-வது நாளாக டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்