மதுரையில் சிறுமி உயிரிழந்த சம்பவம்: நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவு
சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர் திவ்யா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் காவல் துணை ஆணையர் அனிதா நேரில் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
பாலியல் குற்றங்களை தடுக்க.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய வழிமுறைகள் என்னென்ன..?
விடுதிக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது. விடுதி பராமரிப்பு பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள், பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாளை முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மதுரை: மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை ஆருத்ரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முல்லைபெரியாறில் புதிய அணை.. சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், "வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது. அடிக்கடி மழையாலும், ஆற்றுநீர்ப் பெருக்காலும் சாலை பாதிக்கப்படும். வனப்பகுதி என்பதால் அனுமதிக்க முடியாது. தற்போதைய முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும். புதிய அணை கட்டுவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசே ஏற்கும். அணை மேற்பார்வைக் குழுவை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 பந்துகளில் சதம்.. வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடிக்கு இவைதான் காரணம் - சச்சின் பாராட்டு
சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், "வைபவின் அச்சமற்ற அணுகுமுறை, பேட் வேகம், பந்தின் லென்த்தை விரைவில் அடையாளம் காணும் திறன் மற்றும் பந்திற்கு ஏற்றவாறு சக்தியை மாற்றும் திறமை ஆகியவை அந்த அற்புதமான இன்னிங்சுக்கு பின்னணியில் உள்ளன. இறுதி முடிவு: 38 பந்துகளில் 101 ரன்கள். நன்றாக விளையாடினார்!!" என்று பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரெஞ்சு தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டலானது விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் ரம்மி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆன்லைன் ரம்மி தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் சீற்றப்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றாக நிற்போம் என்பதை இந்தியா காட்ட வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி எதிர்பார்க்கிறது. அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் உறுதியையும் காட்ட முடியும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.