இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

Update:2025-08-30 09:06 IST
Live Updates - Page 2
2025-08-30 10:46 GMT

ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து விட்டு சீனாவுக்கு புறப்பட்டார்.

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அவர் சீனாவை சென்றடைந்து உள்ளார். அவருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

2025-08-30 09:50 GMT

''குற்றம் புதிது'' - சினிமா விமர்சனம்

வழக்கமான திரில்லர் கதை என்றாலும், திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மூலம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங்.


2025-08-30 09:49 GMT

''அம்மா'' கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து மனம் திறந்த ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார்.

2025-08-30 09:32 GMT

திமுக எதிர்ப்பு அலையை பயன்படுத்தி தேர்தல் பணியை வேகப்படுத்துங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

தமிழகம் முழுவதும் வலம் வரும் நிலையில், மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் இருக்கிறார்.  அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், மாநில நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், எம்.சி.சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

2025-08-30 09:28 GMT

கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து

கமலா ஹாரிசுக்கு, உயர் பதவியை வகிப்பவருக்கு வழங்கப்படும் ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன், பதவியில் இருந்து வெளியேறும் முன் அவருக்கு இந்த பாதுகாப்பு சேவையை ஏற்பாடு செய்து விட்டு சென்றார்.

கடந்த ஜனவரியில் கமலா ஹாரிஸ் பதவி விலகிய நிலையில், 6 மாத காலத்திற்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

2025-08-30 08:47 GMT

''வடசென்னை 2'', ''எஸ்டிஆர்49''.... வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்

சிம்பு உடனான படத்தின்(''எஸ்டிஆர்49'') அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.

2025-08-30 08:11 GMT

வாகனங்களுக்கான பேன்சி எண்களுக்கு ஏலம்..!

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் வரும் நாட்களில் ஏலம் முறையில் வாகனங்களுக்கு பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.2,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பேன்சி எண்களுக்கான அடிப்படை விலை ரூ.2,000 முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் Parivahan இணையதளத்தில் பதிவு செய்து பேன்சி எண்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2025-08-30 08:09 GMT

சென்னை விமான நிலையத்தில் சிபிஐ சோதனை

சென்னையில் இருந்து வெளிநாட்டுகளுக்கு போலி நகைகளை ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். ஒரிஜினல் தங்க ஆபரணங்களுக்கு பதிலாக, தங்க முலாம் பூசிய போலி நகைகளை ஏற்றுமதி செய்து மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ சோதனையால் சென்னை விமான நிலையம் கார்கோ பகுதி, சுங்கத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

2025-08-30 08:08 GMT

விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை

தவெக தலைவர் விஜய்யின் முதற்கட்ட சுற்றுப்பயணம் குறித்து சென்னை பனையூரில் தவெக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி படுகை மாவட்டங்களில் இருந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2025-08-30 07:57 GMT

அரசு பஸ்களில் விளம்பரம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பஸ்களின் ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற கோரிய வழக்கில், சட்டவிதிகளை பின்பற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி அரசு பஸ் கண்ணாடிகளில், விளம்பரங்கள் ஒட்டப்படுவதாக ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்