முதல்-அமைச்சர் சென்றிருப்பது அரசு பயணமா? இன்ப சுற்றுலாவா? - பாஜக கேள்வி
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒரு மாநில முதல்-அமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணப்படுவது சாதாரணமே. ஆனால், இதற்கு முன்பு துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள். இதில், மார்ச் 2022 துபாய் பயணத்தில் மட்டும் 6,100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாகச் சொல்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் தொடங்கி மக்கள் அனைவரும் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என்று காரணம் சொல்லும் முதலீடுகளை ஈர்த்துவர வக்கற்ற அரசு மக்களின் வரிப்பணத்தில் இன்ப சுற்றுலா செல்வது சரியா?.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னையை அடுத்த முவரசம்பட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கோவையில் பரபரப்பு: லிப்ட் அறுந்து விழுந்ததில் ஊழியர் பலி
பொருட்களை அனுப்ப சென்ற சுரேஷ் நீண்ட நேரம் திரும்பி வராததால் உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை தேடிச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர்.
ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்
ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராமதாசிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளித்திருந்தது. குற்றச்சாட்டுகள் குறித்து நாளைக்குள் பதிலளிக்க அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் இதுவரை அன்புமணி இதற்கு பதில் அளிக்காதநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மறுதினம் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த ஆர்.சி.பி. நிர்வாகம்
பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு?
மத்திய அரசு, தற்போது இருக்கும் 5,12,18,28 என்ற ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 5, 18 என்ற இரட்டை விகிதங்களை கொண்டுவர உள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலங்களுக்கும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் விலை 2 ஆயிரத்து 545 ரூபாயாக உயர்வு - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதல் தொடங்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டி சாலையில் 6 மணி நேரமாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் விபத்திற்குள்ளான 60 டன் எடை கொண்ட சுமார் 55 டன் எடை கொண்ட கண்டெய்னர் லாரி, விடிய விடிய நடந்த போராட்டத்திற்கு பிறகு தற்போது கிரேன் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டெய்னர் லாரி விபத்தில் சிக்கியதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் கடந்த 6 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது.
2026 தேர்தலில் தேமுதிக நிலைபாடு என்ன..? - எல்.கே.சுதீஷ் பதில்
சென்னையில், தமாகா நிறுவனர் ஜிகே மூப்பனார் 24வது நினைவஞ்சலி கூட்டத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து 2026 தேர்தலில் தேமுதிக நிலைபாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எல்.கே.சுதீஷ், “2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும்” என்று கூறினார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
இன்று நடைபெறும் கூட்டத்தில் தேர்தல் வியூகம், கூட்டணி, பரப்புரை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.