திருச்சி : கட்டும் போதே திடீரென சரிந்த பிரபல முருகன் கோவில் ஆர்ச்
திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.;
திருச்சி ,
திருச்சி மாவட்டத்தின் பிரபலமான கோவிலாக விலங்குவது குமாரவயலூர் முருகன் கோவில். கடந்த சில தினமாக கும்பாபிஷேகத்திற்காக பணிகள் நடைபெற்று வந்தது. வருகிற 19 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கோவிலின் நுழைவு வாயிலில் 25 அடி உயரமும் 70 அடி அகலமும் கொண்ட ஆர்ச் வளைவை சிமெண்ட் மற்றும் கற்களால் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இன்று மதியம் ஆர்ச் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றிய 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் இந்த நுழைவுவாயில் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.