திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் இயங்கும்
திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.;
திருச்சி,
திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16849) வருகிற 21, 28-ந்தேதிகளில் மானாமதுரை - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை மட்டும் இயங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதேபோல் மறுமார்க்கமாக இயங்கும் ராமேசுவரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16850) வருகிற 21, 28-ந்தேதிகளில் ராமேசுவரம் - மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையில் இருந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட ரெயில்கள் குறிபிட்ட நாட்களில் வழக்கம் போல் இயங்கும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.