திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது எக்ஸ் தள பதிவை டேக் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.