வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்... நன்றி தெரிவித்த அஜித்
உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில் அஜித்குமார் ரேசிங் அணி அதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.;
சென்னை,
24H கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்ததற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில் அஜித்குமார் ரேசிங் அணி அதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
“துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு, SDAT தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு அஜித்குமார் ரேசிங் அணி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
உங்களது தொடர் ஆதரவு, ஊக்கம் எங்களுக்குத் தேவை. உயரிய இலக்குகளை நோக்கி அஜித் மற்றும் அவரது அணி முழு முயற்சியுடன் பயணிக்கும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.