விஜய் உடன் சென்ற வாகனம் விபத்து

விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.;

Update:2025-09-27 13:10 IST

 

தமிழக வெற்றிக் கழக தலைவர் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். திருச்சியில் இருந்து பிரசார பஸ்சில் சாலை மார்க்கமாக விஜய் நாமக்கல் செல்கிறார்.

இந்நிலையில், திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி விஜய் பிரசார பஸ்சில் பயணம் மேற்கொண்டுள்ளார். தொண்டர்கள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், விஜய்யின் பவுன்சர்கள் (பாதுகாவலர்கள்), செய்தியாளர்கள் என அவரது பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து செல்கின்றனர்.

அந்த வகையில், விஜய் உடன் அவரது பவுன்சர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. முன்னால் சென்ற மற்றொரு காரின் மீது பவுன்சர்கள் சென்ற கார் மோதியது. இதில், பவுன்சர்கள் சென்ற காரின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்