வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்

தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-10-19 09:06 IST

சென்னை,

சென்னை வேளச்சேரி- பரங்கிமலை இடையே ரூ.730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்டு வரும் பறக்கும் ரெயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் அந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, வேளச்சேரிக்கும் பரங்கிமலை மவுண்ட்டுக்கும் இடையிலான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரெயில் வழித்தடம் இறுதியாக டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்