வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா கொடியேற்றம்- சென்னை அடையாறில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று தொடங்கி 08.09.2025 தேதி வரை நடைபெற உள்ளது.;

Update:2025-08-29 13:01 IST

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா 29.08.2025 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 08.09.2025 தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலைப் பொறுத்து, தேவைபட்டால், 29.08.2025, 31.08.2025, 01.09.2025, 07.09.2025, 08.09.2025 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

அடையார் உட்கோட்ட மாற்று வழிகள்:-

திரு.வி.க.பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக எல்.பி. சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்