விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;

Update:2025-10-09 13:14 IST

நெல்லை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து நிருபர்கள் த.வெ.க கொடி பா.ஜ.க. கூட்டத்தில் எப்போது பறக்கும் என்று கேட்ட கேள்விக்கு, தற்போது அதற்கு பதிலளிக்க இயலாது என புன்னகையுடன் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் முத்து பலவேசம், தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்