விருதுநகர் சாஸ்தாகோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு

மொத்தம் 48 நாட்கள் தண்ணீர் திறந்து விடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.;

Update:2025-11-14 19:39 IST

விருதுநகர்,

தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 7 நாட்களுக்கு (17.11.2025 முதல் 23.11.2025 வரை) விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடவும், மீதம் நீர் இருக்கும் வரை 41 நாட்களுக்கு (24.11.2025 முதல் 03.01.2026 வரை) நீர்வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் வழங்கவும், மொத்தம் 48 நாட்கள் தண்ணீர் திறந்து விடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளைய வட்டத்தில் உள்ள வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம், சேத்தூர், முத்துசாமிபுரம், நல்லமங்கலம், செட்டியார்பட்டி, கோவிலூரில் உள்ள 3130.68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்