திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்போம்: காதர் மொய்தீன்

திமுகவுடன் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது என்று காதர் மொய்தீன் கூறினார்.;

Update:2025-10-23 07:49 IST

திருச்சி,

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கும்பகோணத்தில் மஹல்லா ஜமாத் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து டிசம்பரில் மாநாடு நடைபெற உள்ளது. இலங்கைக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தமிழக மீனவர்களை காக்கும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்தி, கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையை வழங்க வேண்டும்.

திமுகவுடன் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது. திமுக கூட்டணியை விட்டு வேறு கூட்டணியை சிந்திப்பதே கிடையாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 6 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். அதில் குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் சீமான் தனியாக நிற்பார். ஆகவே தமிழகத்தில் 3 அணியாக போட்டி இருக்கும். சட்டசபை தேர்தலே சவாலாக இருக்கும். மக்கள் தான் எஜமானர்கள். திராவிட மாடல் அரசுக்கு மக்கள் வெற்றியை தேடி தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்