வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update:2025-11-13 16:47 IST

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் உருவாகியுள்ளது. மிக கனமழை பெய்யும் என்றும், கடல் பகுதியில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்