கரூரில் என்ன நடந்தது? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
அரசின் சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.;
கரூர்,
விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 40 பேரை பலியான சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டாக செய்தியாள்களை சந்தித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது;
“கூட்ட நெரிசல் குறித்த தகவறிந்ததும் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. 39 பேர் உயிரற்ற சடலங்களாவே மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டனர். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் கூராய்வு செய்யப்ப்டடு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. கரூரை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து 114 மருத்துவர்கள், 23 செவிலியர்கள், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விரைந்தனர்.கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர். தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
தவெகவினர் குறுகலான பகுதிகளில் அனுமதியை கோரினர். 23-ம் தேதி அளித்த முதல் மனுவில் தவெகவினர் பெட்ரோல் பங்க் உள்ள ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது. தவெகவினரிடம் கலந்தாலோசித்த பின்னர்தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது. வேலுசாமிபுரத்தில் முன்னதாக வேறு கட்சியினர் கூட்டம் நடந்ததால் அதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.”
இவ்வாறு அவர் கூறினார்.",