தமிழகத்தில் நடைபெற்று வருவது பெண்களுக்கான ஆட்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
விளையாட்டிலும் தமிழ்நாட்டு பெண்கள் சாதித்து வருகின்றனர் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் 43 சதவீதம் பெண்கள் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று வருவது பெண்களுக்கான ஆட்சி. புதுமைப்பெண், தோழி விடுதி என பெண்களுக்கான பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.அனைத்து திட்டங்களும் பெண்களை மனதில்வைத்தே தீட்டப்படுகிறது. விளையாட்டுத்துறையிலும் தமிழக பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். உத்தியோகம் பெண்களுக்கும் லட்சணம் என மாற்றிக் காட்டிய அரசு திராவிட மாடல் அரசு என்றார்.
முன்னதாக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும் சமூக ஆர்வலருமான 101 வயது கிருஷ்ணாம்பாள் ஜெகநாதனை, 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். தொடர்ந்து வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் தமிழ்நாட்டின் பெண் உயர் அதிகாரிகளை எழுந்து நின்று பாராட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.