காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
வங்கக்கடலில் உருவான ’டிட்வா’ புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், கோவை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.