கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது

முதல் மனைவி வீரலட்சுமிக்கு அசோக்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2025-07-23 17:19 IST

சென்னை,

சென்னை பெரும்பாக்கம் நகர்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய குடியிருப்பு அருகே பஸ் நிறுத்தத்தில் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் கடந்த 19-ம் தேதி மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவரது பெயர் பழனிசாமி என்பதும், அவர் தனது மனைவியால் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட பழனிச்சாமி கணவனை இழந்த வீரலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை செய்து வந்த பழனிச்சாமி உறவுக்கார பெண் ஒருவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், முதல் மனைவி வீரலட்சுமிக்கு அசோக்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனிசாமி இதுபற்றி வீரலட்சுமியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பழனிசாமி மனைவி வீரலட்சுமியை கடுமையாக தாக்கி உள்ளார். இது பற்றி வீரலட்சுமி தனது கள்ளக்காதலனான அசோக்குமாரிடம் முறையிட்டுள்ளார். இதை தொடர்ந்து அசோக்குமார் உனது கணவனை வீட்டை விட்டு வெளியேற்றி விடு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்படி வீரலட்சுமி கணவர் பழனிசாமியிடன் சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியேற்றி உள்லார். இதனால் பழனிச்சாமி வெளியிலேயே படுத்து தூங்கி இருக்கிறார்.இந்தநிலையில் பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு அருகே தூங்கிக்கொண்டிருந்த பழனிசாமியை அசோக்குமார் கல்லால் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து அசோக்குமார், வீரலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்