திருமண செலவுக்கு பணம் இல்லாததால் இளம்பெண் தற்கொலை; திருப்பூரில் சோகம்

காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.;

Update:2025-05-26 17:54 IST

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இளம்பெண் மித்ரா (வயது 22). சட்டக்கல்லூரி மாணவியான இவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், திருமண செலவுக்கு பணம் இல்லாதத்தால் பூர்வீக நிலத்தை விற்கும் நிலைக்கு மித்ராவின் குடும்பத்தினர் தள்ளப்பட்டனர். இதனால் மனமுடைந்த மித்ரா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண செலவுக்கு பண்ம இல்லாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்