நெல்லையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

வி.கே.புரம், கட்டபுளி பகுதியைச் சேர்ந்த ஆனந்தசெல்வன் ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.;

Update:2025-05-01 16:15 IST

நெல்லை மாவட்டம், வி.கே.புரம், கட்டபுளி, வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தசெல்வன் (வயது 30) என்பவர் ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதற்காக ஆனந்தசெல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று (30.4.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்