திருநெல்வேலியில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2025-09-20 15:25 IST

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாரதா காலேஜ் விலக்கு அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த மேலக்குளம் நடுவூரை சேர்ந்த மாரிமுத்து (வயது 30) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 5 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், மாரிமுத்துவை காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாரிமுத்துவை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்