பாகிஸ்தான்: வணிக வளாகத்தில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
வணிக வளாகத்தில் சிக்கிய 20 பேரை பத்திரமாக மீட்டனர்.;
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் பிரபல வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென வணிக வளாகத்தில் உள்ள பிற கடைகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், வணிக வளாகத்தில் சிக்கிய 20 பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனாலும் இந்த தீ விபத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.