அணுசக்தி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேன்: 80-வது முறையாக கூறிய டிரம்ப்

காசா போரை நிறுத்தி மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டினேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-18 11:38 IST

கோப்புப்படம்

நியூயார்க்,

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி கூறி வருகிறார். ஆனால் அவருடைய பேச்சை இந்தியா அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அந்தவகையில் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனான சந்திப்பின்போது டிரம்ப் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உள்பட 8 போர்களை நிறுத்தியுள்ளதாக பேசினார். இதுகுறித்து அவர், “கடந்த 1 ஆண்டில் 8 அமைதி போர்கள் மட்டுமின்றி காசா போரை நிறுத்தி மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டினேன். மேலும் அணுசக்தி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஷெபாஸ் ஷெரீப், “டிரம்ப் குறைந்தபட்சம் 1 கோடி மக்களின் உயிரை காப்பாற்றினார். இது மகத்துவமானது. மேலும் பாகிஸ்தானுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்றார்.

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை நிறுத்தினேன் என டிரம்ப் கூறுவது இது 80-வது முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்