கனடாவில், 3-வது முறையாக இந்திய நடிகரின் ஓட்டலில் துப்பாக்கி சூடு

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.;

Update:2025-10-17 23:52 IST

ஒட்டவா,

இந்திய நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் கனடா நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இந்த ஓட்டல் திறக்கப்பட்டது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார். தொடர்ந்து ஆகஸ்டு மாதமும் இந்த ஓட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்