உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்
சீனாவின் விரிவான மனுவை மத்திய வர்த்தக அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
பீஜிங்,
மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கு இந்தியா மானியம் வழங்குவதை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார் அளித்துள்ளது. இதுபற்றி சீன வர்த்தக அமைச்சகம் கூறியதாவது:-
இந்தியாவின் மானிய சலுகை, உலக வர்த்தக அமைப்பின் பல்வேறு விதிமுறைகளை மீறும் செயல். இந்தியா தனது உள்நாட்டு தொழிலுக்கு பலன் அளிக்கும்வகையில் நியாயமின்றி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் சீனாவின் சட்டப்பூர்வ நலன்கள் பாதிக்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளது.
சீனாவின் புகார் பற்றி கேட்டதற்கு ‘‘சீனாவின் விரிவான மனுவை மத்திய வர்த்தக அமைச்சகம் ஆய்வு செய்யும்’’ என்று மத்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.