புதின்-டிரம்ப் இடையேயான வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நிறைவு
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக தனி விமானத்தில், அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு டிரம்ப் சென்று சேர்ந்துள்ளார்.;
டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது. இதனை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது புதின் கூறும்போது, எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று கூறினார்.
டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான். டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.
டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை 3 மணிநேரத்திற்கு பிறகு நிறைவடைந்து உள்ளது.
டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
டிரம்ப் மற்றும் புதின் கலந்து கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தைக்கான ஆலோசனை கூட்டம் சற்று முன்பு தொடங்கியது.
பொதுமக்கள் படுகொலையை நிறுத்துவீர்களா? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு புதின், சரியாக கேட்கவில்லை என கூறினார்.
ரஷியா இனி இருக்காது என்றும் உக்ரைனுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதியில் காணப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தனி விமானத்தில் வந்து சேர்ந்துள்ளார்.