அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பாதிரியார் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பாதிரியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-04-05 05:25 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் செனிகா நகரில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் காரசாலா என்பவர் பாதிரியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் ஆலய நிர்வாக அலுவலகத்தில் அவரை சந்திக்க கேரி ஹெர்மேஷ் (வயது 66) என்பவர் சென்றிருந்தார்.

அவர்கள் பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கேரி திடீரென பாதிரியாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினார். படுகாயம் அடைந்த காரசாலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதற்கிடையே அங்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய கேரி ஹெர்மேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்