தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா பயணம்; துணை அதிபருடன் சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது;

Update:2025-06-24 19:34 IST

பீஜிங்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், சீனா சென்றுள்ள அஜித் தோவல் இன்று அந்நாட்டு துணை அதிபர் ஹன் யங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு பிராந்திய அமைதிக்கு நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்