பாகிஸ்தான்: வணிக வளாகத்தில் தீ விபத்து 3 பேர் பலி; பலர் காயம்

ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல கடைகளுக்கும் பரவியுள்ளது என தெரிவித்து உள்ளார்.;

Update:2026-01-18 06:52 IST

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், விரைந்து சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி தெற்கு டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா, தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர் என கூறியுள்ளார். மீட்பு குழுவை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஹசானுல் ஹசீப் கான் கூறும்போது, பெரிய வணிக வளாகத்தில் தரை தளத்தில் நிறைய கடைகள் உள்ளன.

அவற்றில் தீ பிடித்து பரவ தொடங்கியது. இதில் பலர் சிக்கி கொண்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன என கூறினார்.

ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல கடைகளுக்கும் பரவியுள்ளது என தெரிவித்து உள்ளார். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்