பாகிஸ்தானில் கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 14 பேர் பலி; இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்

இந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2026-01-17 15:29 IST

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் புறப்பட்டனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் இன்று அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புகளில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 14 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்