பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 1.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-05-10 06:32 IST

இஸ்லாமாபாத்,

பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 29.67 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 66.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இந்தியாவை தாக்குவதற்கு பாகிஸ்தான் முயன்றுவரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்