தொழில்நுட்ப கோளாறு: அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து

240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றன.;

Update:2025-10-25 00:30 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களுள் ஒன்று அலாஸ்கா ஏர்லைன்ஸ். சியாட்டிலை தளமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தநிலையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வலைதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது.

அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் விமானங்களும் உடனடியாக தரையிறங்கின. இதனால் சுமார் 40 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றன. 

Tags:    

மேலும் செய்திகள்