விமானத்தில் ஏறும்போது தடுமாறிய டொனால்டு டிரம்ப் - வைரல் வீடியோ

மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.;

Update:2025-06-09 11:57 IST

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.

விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறினார். படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக்கொண்டார். பின்னர், அவர் பட்டிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் நுழைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் விமானத்தில் ஏறும்போது அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்கள் அரங்கேறி சமூகவலைதளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

மேலும் செய்திகள்