இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.;

Update:2025-12-27 10:33 IST

சிட்னி,

இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக ‘அபய்ராப்’(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அபய்ராப்’ மருந்து ஐதராபாத்தைச் சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ‘அபய்ராப்’ தடுப்பூசியின் போலியான தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்தியாவில் 2023 நவம்பர் 1-ந்தேதி முதல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு வெறிநாய்க்கடி நோயில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அந்த தடுப்பூசியை போட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பூசியின் மாற்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய அரசு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 2023 நவம்பர் 1-ந்தேதி முதல் இந்தியாவில் ‘அபய்ராப்’ தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்களைப் பெற்றவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்