எல்லையில் உடனடி போர்நிறுத்தம்: தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவிப்பு

20 நாட்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், இதுவரை 101 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-12-27 11:57 IST

பாங்காக்,

தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மலேசிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 7-ந்தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை வெடித்தது. 20 நாட்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், இதுவரை 101 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல் காரணமாக இருநாடுகளைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக இருநாட்டு அரசுகளும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த போர்நிறுத்தம், அனைத்து சூழ்நிலைகளிலும், அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பொதுமக்களின் உடைமைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், இரு தரப்பினரின் ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய போர்நிறுத்தமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்