வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது; இந்தியர்கள் பாதிப்பு
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால் டிரம்ப் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் தங்கி வேலை பார்ப்பதற்கான இ.ஏ.டி எனப்படும் வேர வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை தானாக நீட்டிக்கும் வசதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புதுறை வெளியிட்ட அறிக்கையில் இன்று (30-ந்தேதி) மற்றும் அதற்கு பிறகு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை புதுப்பிக்க கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இனி தானியங்கி மூலம் நீட்டிப்பு வழங்கப்படாது என தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கையை அதிபர் டிரம்ப் எடுத்துள்ளார். அவரின் இந்த நடவடிக்கையால் வெளிநாட்டவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் அதிகமாக வேலை பார்த்து வரும் இந்தியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகி உள்ளது.