தேர்தல் பிரசாரத்துக்கு பாம்புடன் வந்த வாலிபர்: சேலத்தில் பரபரப்பு

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Update: 2024-04-16 04:02 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அவர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அந்த கூட்டத்திற்கு வந்த ஒரு வாலிபரால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்தவரான அந்த வாலிபர், வயல் வெளியில் சுற்றித்திரிந்த நாகப்பாம்பு ஒன்றை பிடித்து, கழுத்தில் போட்டுக்கொண்டு அந்த பகுதிக்கு வந்தார். 2 கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார். இதைக்கண்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.ஆனால் அந்த வாலிபர் பிரசாரம் முடியும் வரை, அந்த பகுதியை சுற்றிச்சுற்றி வந்தார். டி.எம்.செல்வகணபதி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு தான் அந்த வாலிபரும் அந்த இடத்தில் இருந்து சென்றார். அந்த வாலிபர் யார்? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்