400 இடங்களில் வெல்வதே இலக்கு - அமித் ஷா

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்குகிறது

Update: 2024-03-16 15:02 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

 பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பாதுகாப்பு, அனைத்து பிரிவினரின் நலன் மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்று பத்தாண்டுகளை நாடு கண்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில், இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை இலக்காக கொண்டு தேர்தலில் களமிறங்குகிறது. இந்த இலக்கை நிறைவேற்ற மக்கள் வாக்களித்து, வளர்ந்த மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க பங்களிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

ஜனநாயகத்தின் இந்த மாபெரும் திருவிழாவில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து தேசத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்