நாடு முழுவதும் வாக்குப்பதிவு தீவிரம்...மதியம் 1 மணி நிலவரம் என்ன?

நாடு முழுவதும் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-19 09:07 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மக்கள் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், திரிபுராவில் மதியம் 1 மணி நிலவரப்படி 53.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல மேற்கு வங்காளம்- 50.96 சதவீதம், உத்தரபிரதேசம்- 36.96 சதவீதம், உத்தரகாண்ட் - 37.33 சதவீதம், பீகார்- 32.41 சதவீதம், சத்தீஷ்கார் - 42.57 சதவீதம், அசாம்- 45.12 சதவீதம், மத்திய பிரதேசம் - 44.43 சதவீதம், மணிப்பூர்- 46.92 சதவீதம், மராட்டியம் - 32.36 சதவீதம், ராஜஸ்தான் - 33.73 சதவீதம், மேகாலயா - 48.91 சதவீதம், நாகாலாந்து - 43.62 சதவீதம், ஜம்முகாஷ்மீர்- 43.11 சதவீதம், சிக்கிம்- 36.82 சதவீதம், அருணாசல பிரதேசம்- 37.39 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்