பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல் இது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Update: 2024-04-15 13:22 GMT

சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். மழை வெள்ள பாதிப்புக்கு, மற்றவர்கள் மீது பழி சுமத்தி திமுக அரசு தப்பிக்க பார்க்கிறது. மழை வெள்ளத்தின் போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், திமுக அரசு என்ன செய்தது?. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாக பொய் கூறுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மட்டும் விலைவாசி 40 சதவீதம் உயர்ந்துள்ளது. ஊழல் இல்லாத துறையே இல்லை, எல்லா துறையிலும் லஞ்சம்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாக 2,118 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக அறிவித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்