3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.;

Update:2025-11-02 13:20 IST

image courtesy: @BCCI

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து முன்னிலையை அதிகரிக்க கடுமையாக முயற்சிக்கும்.

அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிக் கணக்கை தொடங்க இந்திய அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்