3வது டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து

அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.;

Update:2025-09-21 21:14 IST

Image Courtesy : @cricketireland

டப்ளின்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி மழை பெய்ததன் காரணமாக டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக 2 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜேக்கப் பெத்தேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டிர்லிங் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஸ் அடேர் 33 ரன்களும், ஹாரி டெக்டர் 28 ரன்களும் அடித்தனர்.

அதிகபட்சமாக டெலானி 48 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்