3வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.;

Update:2025-07-12 08:00 IST

Image Courtesy: @ICC

ஜமைக்கா,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் 159 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 133 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடத்தப்படுகிறது. முதல் இரு டெஸ்டிலும் பந்து வீச்சாளர்களே கோலோச்சினர். பிங்க் பந்திலும் பவுலர்களின் ஜாலமே மேலோங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும். அதேவேளையில் இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் போராடும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்